எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உள்ள கனடிய தூதரகம் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்படும் என கனடிய அரசு தெரிவித்துள்ளது.
எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கனடிய அரசு விளக்கம் தெரிவ்த்துள்ளது.
கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பேயர்டு அவர்களின் செய்தியாளர் Rick Roth, அவர்கள் இன்று விடுத்துள்ள இமெயில் அறிக்கை ஒன்றில், கெய்ரோவில் உள்ள கனடிய தூதரகத்தில் பணிபுரியும் கனடிய ஊழியர்களின் பாதுகாப்பிற்காக தூதரகம் மூடப்படுகிறது என்றும், நிலைமை சரியானதும் மீண்டும் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை கனடிய தூதரகத்தின் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.,
எகிப்து தலைநகர் கெய்ரோவில் வரலாறு காணாத வகையில் அந்நாட்டு அதிபர் Mohammed Morsi. அவர்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. எகிப்து இராணுவம் அதிபரை பதவி விலகும்படி எச்சரித்துள்ளது.
மேலும் எகிப்தில் வாழும் கனடியர்களின் பாதுகாப்பு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கனடிய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
news thedipaar thanks
No comments:
Post a Comment