அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்டவர் வெனிசூலாவில் தஞ்சம்
[ புதன்கிழமை, 10 யூலை 2013,
அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் வெனிசூலாவில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவால் கைது செய்யப்படும் நிலை இருப்பதால், ஸ்னோடென் ரஷ்யாவின் சிரிமெத்யோவ் விமான நிலையத்தில் ஜூன் 23ம் திகதி முதல் பதுங்கியுள்ளார்.
இந்நிலையில் அரசியல் அடைக்கலம் தரத் தயாராக இருப்பதாக வெனிசூலா விடுத்த அழைப்பை ஸ்னோடென் ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ரஷ்யா வெளியுறவு விவகாரங்களுக்கான குழு தெரிவித்துள்ளது.
எனினும் ஸ்னோடெனை எவ்வாறு வெனிசூலா தொடர்பு கொண்டது என்ற தகவலும், அவர்களது அழைப்பை எப்படி ஸ்னோடென் ஏற்றுக் கொண்டார் என்பது குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.
இதற்கிடையே ஸ்னோடெனுக்கு எந்த நாடும் அடைக்கலம் தரக் கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment