பயணிகள் நெரிசல் இல்லாத நேரங்களில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்கள், ரெயில்களில் காதல் ஜோடியினர், கணவன்–மனைவியர் நெருக்கமாக வரம்பு மீறிய காதல் லீலைகளில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்தக் காட்சிகள் ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன.
இவற்றை எப்படியோ ஆபாச இணைய தளங்களில் விஷமிகள் பதிவேற்றம் செய்து, அவை வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தின. இந்த காட்சிகள் ஒவ்வொன்றும் 2 முதல் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய காட்சிகளாக அமைந்தன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
இந்த நிலையில் இத்தகைய காட்சி மீண்டும் ஆபாச இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மெட்ரோ ரெயில் நிலைய படிக்கட்டிலும், மெட்ரோ ரெயிலுக்குள்ளும் ஆண்–பெண் ஜோடி எல்லை மீறி நடந்துகொள்ளும் காட்சி இது.
இது தொடர்பாக டெல்லி மெட்ரோ நிறுவனத்தின் செயல் இயக்குனர் அனுஜ் தயாள் கூறுகையில், ‘‘ விசாரணை நடத்துவதற்காக இந்த காட்சியை பாதுகாப்பு கமிஷனரிடம் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் ஒப்படைத்துள்ளது. ஏற்கனவே வெளிவந்த ஆபாச வீடியோவும் தற்போது ஆராயப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில்களில் பயணம்செய்யும்போது ஒழுக்கத்தையும், ஒழுங்கையும், நன்னடத்தையையும் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்’’ என கூறினார்.
இந்த காட்சிகள் ஆபாச இணையதளங்களில் கசிவதற்கு, மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அவர்கள் இதை மறுத்துள்ளனர்.
Attached Videos
MMS of couple at Metro station surfaces
thedipaar thanks
No comments:
Post a Comment