கனடாவின் ரொறன்ரோவில் கனமழை கொட்டி தீர்த்தது. இம் மழைக்கு கால்குரே பகுதியில் 3 பேர் பலியானார்கள்.
சுமார் 1 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
மின்சாரம் இன்றி 4 லட்சம் குடும்பங்கள் தவிக்கின்றன.
இதனால் சாலைகள், சுரங்கப்பாதைகளில் வெள்ளம் தேங்கி ரெயில்கள், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
Pearson International Airport இல் வரலாற்றுப் பதிவாக 126 mm மழைவீழ்ச்சி திங்கட்கிழமை பதிவாகியுள்ளது. இதற்கு முதல் அதிக மழைவீழ்ச்சி 1954 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி பதிவாகியுள்ளது.
ஒன்றரை மணி நேரத்தில் 90 mm மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கனடா வானிலை அவதான நிலையத்தை சேர்ந்த Peter Kimbell கூறியுள்ளார்.
No comments:
Post a Comment