5 Feb 2014
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மாதவலாயம் பகுதி பொது மக்கள் மற்றும் திரளான பெண்கள் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணணை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:–
மாதவலாயம் தெற்கு தெருவில் வசிக்கும் நூருல் ஆலம் என்பவரின் மனைவி ஜன்னத் ஆலம் மற்றும் அவரது 5 மாத கைக்குழந்தையை நேற்று இரவு 2 போலீசார் விசாரணை என்று கூறி அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் தங்களை சுசீந்திரம் போலீசார் என்று கூறி உள்ளனர்.
தற்போது ஜன்னத் ஆலமும், அவரது குழந்தையும் எங்கு இருக்கிறார்கள்? என்றே தெரியவில்லை. எந்த வழக்காக இருந்தாலும் இரவு நேரத்தில் பெண்களை கைது செய்ய கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கோர்ட்டு உத்தரவை மீறி எந்த வழக்கும் இல்லாத பெண்ணை கைக்குழந்தையுடன் போலீசார் அழைத்து சென்றது கண்டிக்கத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ்சூப்பிரண்டு மணிவண்ணன் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று உறுதி அளித்தார். மனு கொடுக்க வந்தவர்களுடன் மாதவலாயம் லியாகத்அலி, எஸ்.டி.பி.ஐ மாவட்ட துணைத் தலைவர் ஜாகீர் ஹுசேன், எஸ்.டி.பி.ஐ.கட்சி மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி, மாவட்ட பொது செயலாளர் காஜா மைதீன்,மாவட்ட செயலாளர் பிர்தவ்ஸ், எஸ்.டி.டி.யு. மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உள்பட பலர் சென்றனர்.
news thoothuonline thanks
No comments:
Post a Comment