அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 8 February 2014

ஆர்எஸ்எஸ் நச்சுத் தன்மை உடையது என்று கூறிய படேலுக்கு மோடி சிலை அமைக்கிறார் : ராகுல்


 : 08 February 2014 02:22 PM IST

குஜராத் மாநிலம் பர்தோலியில் இன்று நடைபெறும் காங்கிரஸ்  பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல், ஆர்எஸ்எஸ் நச்சுத் தன்மை உடையது என்று கூறிய படேலுக்கு குஜராத்தில் சிலை அமைக்கிறார் மோடி என்றார்.

மேலும் அவர் பேசுகையில், குஜராத்தில் 9 ஆண்டுகளாக லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை. விவசாயிகளுக்காகவும், வேளாண் நிலங்களுக்காகவும்  போராடிய கட்சி காங்கிஸ் கட்சி.
ஆர்எஸ்எஸ்காக வாழ்க்கையை அர்ப்பணித்த நரேந்திர மோடி, ஆர்எஸ்எ நச்சுத்தன்மை உள்ளது என்று கூறிய சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கிறார்.
குஜராத்தில் சிறைக்கு சென்றவர்களே அமைச்சர்களாக உள்ளனர். காந்தியின் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் சித்தாந்தமே காரணமாகும்.
ஊழலை எதிர்ப்பதாகக் கூறும் பாஜக, ஊழலை ஒழிக்க உதவும் 6 மசோதாக்களை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவிக்கிறது/
குஜராத்தில் 6000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இவர்கள் ஆளும் குஜராத் வரலாற்றில் இடம்பெறாது; ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தகவல் கமிஷ்னர்கள் உள்ளனர். ஆனால் குஜராத்தில் ஒருவர் தான் இருக்கிறார்.
குஜராத்தில் 13,000 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குஜராத்தில் 6000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; குஜராத்தில் மக்கள் ஏழைகளாக உள்ளனர் இங்கு ஆள்பவர்கள் வளர்ச்சியை பற்றி பேசுகின்றனர். ஆனால்  நாங்கள் (காங்கிரஸ்) விவசாயிகளுக்காகவும், மலைவாழ் மக்களுக்காகவும் பாடுபடுகிறோம்.
  குஜராத் அரசு ஏழைகளுக்காக பணியாற்றவில்லை; மோடி உண்மைக்கு எதிராக பேசி வருகிறார்; நாங்கள் வறுமையை ஒழிக்க எண்ணுகிறோம்; ஆனால் அவர்கள் வறுமையை ஊக்குவிக்க நினைக்கின்றனர்; மக்களால் தான் குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளது; எந்த ஒரு தனி மனிதராலும் இல்லை; குஜராத் அரசு பணக்காரர்களால் நடத்தப்படுகிறது  குஜராத்தில் ஏழைகளின் ஆட்சி வர வேண்டும் என்று விரும்புகிறேன்;

news dinamani thanks

No comments:

Post a Comment