ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி நேவிகேஷன் செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட் இன்று அதிகாலை 1.32 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து சுமார் 20 நிமிஷங்கள் பயணத்துக்குப் பிறகு தாற்காலிகப் பாதையில் செயற்கைக்கோளை ராக்கெட் செலுத்தியது. பூமியிலிருந்து அதிகபட்சம் 20 ஆயிரத்து 670 கிலோமீட்டர் தொலைவும், குறைந்தபட்சம் 282 புள்ளி 5 கிலோமீட்டர் தொலைவும் கொண்ட இந்தப் பாதையில் செயற்கைக்கோள் சுற்றி வருகிறது. பெங்களூருக்கு அருகில் உள்ள ஹசன் கட்டுப்பாட்டு மையத்தித்திலிருந்து செயற்கைக்கோளிலுள்ள திரவ மோட்டார் இயக்கப்பட்டு, திட்டமிட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும். மொத்தம் 320 டன் எடையும், 44 மீட்டர் உயரமும் கொண்ட இந்த ராக்கெட், இரவு நேர வானத்தில் மிகப்பெரிய வெளிச்சத்துடனும், சத்தத்துடனும் விண்ணில் பாய்ந்தது. எக்ஸெல் வகை ராக்கெட் என்பதால் இதன் பக்கவாட்டில் மொத்தம் 6 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த வெற்றியோடு சேர்த்து இதுவரை மொத்தம் ஏவப்பட்ட 28 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் 27 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
news tamilantelevision thanks
No comments:
Post a Comment