அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 16 October 2014

நேற்று நீலாங்கரையில் தமிமுன் அன்சாரி, இன்று எஸ்.பி.பட்டினத்தில் செய்யது முகம்மது



இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகில் உள்ள எஸ்.பி.பட்டினத்தில் நேற்று மாலை காவல்துறை துணை ஆய்வாளர் காளிதாஸ் என்பவரால் செய்யது முகம்மது என்ற சகோதரர் மூன்று தடவை துப்பாக்கியால் சுடப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார். வழமைப்போல் காவல்துறை, சினிமா பாணியில் தன்னுடைய உடலில் தானே கீறல்களை ஏற்படுத்திக் கொண்டு, செய்யது முகம்மது தாக்கியதால் தான் சுடநேர்ந்தது என்று காவல்துறை மழுப்பிக் கொண்டிருந்தது.

எஸ்.பி.பட்டினம் மக்கள் பரபரப்படைந்து சாலை மறியலில் ஈடுபட்ட சூழலில், காவல்துறை உயர் அதிகாரிகளை மாநில அமைப்புச் செயலாளர் எஸ். முகம்மது ஜெய்னுலாபிதீன் அவர்கள் உயர் அதிகாரிகளிடம் "இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது இது முதல்முறையல்ல. கடந்த வருடம் சென்னை நீலாங்கரையில் தமிமுன் அன்சாரி என்ற சிறுவன் சுடப்பட்டான். இன்று செய்யது முகம்மது படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்கதையாகி விடக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர் காளிதாஸ் மீது கொலை வழக்கு பதியப்பட வேண்டும் என்றும், அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்தார். அதேபோல் ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்தார். மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்நிலையில் தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ, மூத்த தலைவர் செ. ஹைதர் அலி ஆகியோர், சென்னையிலிருந்து உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். இதனிடையே மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி வருவதுடன் இன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள மக்களிடத்தில், காவல்துறை எடுத்துவரக்கூடிய நடவடிக்கைகளைக் கூறி அமைதிப்படுத்தினார்.
முன்னதாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்னால் தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது; காவல்துறை உயர் அதிகாரிகள் தந்த வாக்குறுதிகளால் போராட்டம் கைவிடப்பட்டது. வாக்குறுதிகளின் அடிப்படையில் காளிதாஸ், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை (போஸ்ட் மார்ட்டம்) நடக்கும் பொழுது, இறந்தவரின் சார்பாக வீடியோ எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், துறை ரீதியான நடவடிக்கைகளுக்காக மாஜிஸ்டிரேட் விசாரணைக்குப் பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களும், மாநில அமைப்புச் செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன் அவர்களும் களத்தில் உள்ளார்கள்.
காவல்துறை துணை ஆய்வாளர் காளிதாசின் இந்த கொடூர நிகழ்வைக் கண்டித்து தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.  


news tmmk thanks

No comments:

Post a Comment