அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 13 October 2015

வகுப்பில் சிறுநீர் கழித்த சிறுமியை சூடான இரும்பு தகடு மீது அமர வைத்த ஆசிரியை

[ செவ்வாய்க்கிழமை, 13 ஒக்ரோபர் 2015, 01:44.49 PM GMT +05:30 ]
ஆந்திராவில் வகுப்பறையில் சிறுநீர் கழித்ததற்காக 4 வயது சிறுமியை சூடான இரும்புத் தகடு மீது அமர வைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு நகரில் ஹோப் என்னும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
அந்த பள்ளியில் படித்து வரும் 4 வயது சிறுமி வகுப்பறையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மதிய வேளையில் சிறுமியை சூடான இரும்புத் தகடு மீது அமர வைத்துள்ளார்.
சூடான தகடில் அமர்ந்ததில் சிறுமியின் மர்ம உறுப்பு உட்பட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமியிடம் புகார் அளித்தனர்.
எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்து அவர்கள் பொலிசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின்பேரில் பொலிசார் பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியை மற்றும் பணிப்பெண் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமை அமைப்பின் உறுப்பினர் அச்யுத் ராவ் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.



news newindianews thanks

No comments:

Post a Comment