திருச்சி அருகே பேய் பிடித்ததாகக் கூறப்பட்ட இளம்பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரை அடுத்த சின்னப்பள்ளி பாளையத்தில் மாரியப்பன்-மஞ்சுளா என்ற தம்பதி தங்களது 19 வயது மகள் வினோதினியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
10-ம் வகுப்பு வரை படித்துள்ள வினோதினி படிப்பை விட்டுவிட்டு தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், வினோதினி சமீபகாலமாக தானாக பேசி, சிரித்து வந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வினோதினிக்கு பேய் பிடித்ததாகக் கூறியதால், அவரது பெற்றோர் வினோதினியை பல இடங்களுக்கு பேய் விரட்ட அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த மந்திரவாதிகளில் சிலர், வினோதினிக்கு பிடித்திருந்த பேய்களில் தீக்குளித்து இறந்த ஒரு பெண்ணின் ஆவி மட்டும் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் வினோதினியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து மஞ்சுளா வீட்டிற்குள் ஓடிச் சென்று பார்த்தபோது, அங்கே உடல் முழுவதும் கருகிய நிலையில் வினோதினி சடலமாகக் கிடந்துள்ளார்.
பின்னர் இது தொடர்பான புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வினோதினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment