அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 14 November 2015

புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மாவட்டத்தில் பரவலாக மழை

ராமநாதபுரம்
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.

எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர் போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் அடைமழை பெய்து பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்த புயல் மழையால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையோ, அதனால் எந்த பாதிப்போ ஏற்படவில்லை. இந்தநிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதால் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட வானம் நேற்று அதிகாலை முதல் கருமேகங்கள் திரண்டு காட்சியளித்தது. இந்த கருமேகங்கள் காரணமாக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே இடைவிடாது பரவலாக தூறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்தமழையாக இல்லாவிட்டாலும் இடைவிடாமல் தூறலுடன் மழை பெய்துவருவதால் பருவநிலை மாறி காணப்படுகிறது.
ராமேசுவரம்ராமேசுவரத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் சீதா தீர்த்தம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மழையில் மெய்யம்புளி பஸ்நிறுத்தம் அருகே சாலை ஓரத்தில் இருந்த வாகை மரம் சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசீலன், துணை தலைவர் பழனி முனியாண்டி, ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை எந்திரம் மூலம் அகற்றினர். மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் சுமார் 15 நிமிடம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமேசுவரம் பகுதியில் மழைகாலங்களில் சீதா தீர்த்தம் பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காற்றழுத்த தாழ்வு நிலை கடந்து செல்லும் முன்னரே இவ்வாறு மேகமூட்டத்துடன் மழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:– முதுகுளத்தூர்–2.6, பாம்பன்–8.2, பள்ளமோர்குளம்–9, மண்டபம்–11.5, ராமேசுவரம்–10.2, தங்கச்சிமடம்–7.4, கடலாடி–1 ஆக இருந்தது.
மகிழ்ச்சிகாலை நேரத்திற்கு பின்னரே மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இதன்படி நேற்று காலை முதல் மாலை வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:– மண்டபம்–1.2, பள்ளமோர்குளம்–8, ராமேசுவரம்–7.4, பாம்பன்–6.7, ராமநாதபுரம்–22.2, பரமக்குடி–4.4, முதுகுளத்தூர்–2, கடலாடி–18.1, வாலிநோக்கம்–16.8, தீர்த்தாண்டதானம்–5.2. மாவட்டத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
news dailythanthi thanks

No comments:

Post a Comment