சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 31 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது
.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நாச ஆதிக்கமும் அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த உள்நாட்டு போர் காரணமாக 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர், 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள டமாஸ்கஸ் பகுதியில் ரஷ்யா மற்றும் அரச படைகள் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏராளமானோர் படுகாயமடைந்தனர். வான்வெளி மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியாவின் மனித உரிமைக்கான கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
டோமா, சக்பா உள்ளிட்ட நகரங்களில் இந்த வான்வெளித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் இந்த தாக்குதல் ரஷ்யா மூலம் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment