ஏர்வாடியில் காஜா மைதீன் படுகொலை:
குற்றவாளிகளை உடனே கைது செய்ய தமுமுக வலியுறுத்தல்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த காஜாமைதீன் என்ற வாலிபர் நேற்று இரவு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஆர்வமும், சேவையாற்றும் குணமும் கொண்ட காஜா மைதீன் படுகொலை செய்யப்பட்டது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக மதரீதியான கட்சியைச் சேர்ந்த முத்துராமன் என்பவரின் தொடர் சதிச்செயலால் காஜாமைதீன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இக்கொலை தொடர்பான விசாரணையில் காவல்துறையின் மெத்தனப் போக்குடன் நடந்து வருவதாகவும், குற்றவாளிகளைக் கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் செய்வதாலும் காஜா மைதீனின் பிரேதத்தை வாங்க அவரது குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் மறுத்து வருகின்றனர்.
எனவே, காவல்துறை இக்கொலைச் சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் எனவும், கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காஜா மைதீன் குடும்பத்தினருக்கு அரசு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கவேண்டும் எனவும் தமுமுக கேட்டுக் கொள்கிறது.
அமைதியாக உள்ள ஏர்வாடியில் சர்ச்சைக்குரிய நபர் வந்தபிறகுதான் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமுமுக வலியுறுத்துகிறது. இல்லையெனில் தமிழகம் தழுவிய போராட்டமாக இதை விரிவுபடுத்தும் என்று தமுமுக எச்சரிக்கிறது.
அன்புடன்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், தமுமுக.
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், தமுமுக.
tmmk tanks
No comments:
Post a Comment