சவுதியில் அமுலுக்கு வரும் புதிய சம்பள கொள்கை, வெளிநாட்டவர்களுக்கும் பாதிப்பா?
சவுதியில் அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் சலுகைகளைக் குறைக்கும் படி சவுதி மன்னர் சல்மான் அறிவிப்பு விடுத்துள்ளார்.
மசகு எண்ணெய் விலையின் தொடர் சரிவுநிலை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியமையே, மன்னரின் இந்த அறிவிப்பின் பின்னணியாகும்.
அமைச்சர்கள் இளவரசர்கள் உட்பட அரச அதிகாரிகளின் சம்பளத்தில் 20 சதவீதம் வரையில் குறைப்பதற்கு உத்தரவு விடப்பட்டுள்ளது.
மேலும் ஷூரா கவுன்சில் உறுப்பினர்களின் வாகனம் மற்றும் இருப்பிட சலுகைகளில் இருந்து 15 சதவீதம் குறைக்கப்படும்.
பொருளாதார நிலைமை சீரடையும் வரை அரச ஊழியர்களுக்கான வருட இறுதி சம்பள உயர்வும் (increment) வழங்கப்பட மாட்டாது.
இதே போன்று அரச நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுபவர்களுக்கும் சம்பள உயர்வுப் படிகள் வழங்கப்பட மாட்டாது.
அரச நிறுவனங்களில் மேலதிக நேரக் கொடுப்பனவுகளிலும் மட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அரச ஊழியர் ஒருவரின் வருடாந்த விடுமுறையும் 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 42 நாட்களாக இருந்த அமைச்சர் ஒருவரின் வருடாந்த விடுமுறை தினம், 36 நாட்களாக குறைக்கப்படவுள்ளது.
மேலும் விடுமுறையில் செல்லும்போது போது வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது.
அரச நிறுவனங்களின் மாதாந்த தொலைபேசிக் கட்டணத் தொகை 1000 SR ஆக மட்டுப்படுத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு அமைச்சும், தனது நிறுவனங்களின் கீழ் எதிர்காலத்தில் வெற்றிடம் ஏற்படக்கூடிய தொழில் வெற்றிடங்கள் பற்றிய அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் நிதி அமைச்சுக்கு அறிக்கை இடச்செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. திரைசேறி அத்தியாவசியம் எனக் கருதும் தொழில் வெற்றிடங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அரச நியமனங்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இது இந்த நிதியாண்டு இறுதி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடுகின்றது.
மேலதிமாகவுள்ள அரச ஊழியர்கள் ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தப்படுவர்.
சம்பளம் மற்றும் சலுகைகள் குறைப்பினூடாக தனியார் துறையினரின் வேலையில்லாப் பிரச்சினை மற்றும் குறைந்த ஊதியம் தொடர்பான சிக்கல்களை நிவர்த்திப்பதற்கும் எதிர்பார்க்கப் படுகின்றது.
இத்தகைய தீர்மானங்கள் சவூதியில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடத்திலும் தாக்கத்தினை விளைவிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
சவுதி மன்னரின் சம்பளம் மற்றும் சலுகைகள் குறைப்பு தொடர்பான வேண்டுகோள், இஸ்லாமிய புதுவருடத்தினைத் தொடர்ந்து அமுலுக்கு வர இருக்கின்றது.
ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை நீக்கப் பட்டதன் பின்னர், ஈரான் OPEC அமைப்பின் வேண்டுகோளையும் கருத்தில் கொள்ளாது, தேவைக்கு மிஞ்சிய அளவு மசகு எண்ணெய்யை சந்தைப்படுத்தியமையே, சர்வதேச அளவில் எண்ணெய் விலை குறைவடைவதற்கு நேரடிக் காரணமாக அமைந்தது.
Please follow and like us
news nikalvumedai thanks
No comments:
Post a Comment