எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் தனபால் விளக்கம்
January 30, 2017
சட்டமன்றத்தில் பேசும் அ.தி.மு.க. உறுப்பினர்கள், பொதுச்செயலாளர் சசிகலா பெயரை குறிப்பிடுவதில் தவறில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை பற்றி குறிப்பிட்டு பேசினார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது சபாநாயகர் தனபால், அந்த கட்சித் தலைவர்களை பற்றி அவையில் பேசுவதற்கு உரிமை உள்ளது என்றும், வேண்டுமென்றால் தி.மு.க. உறுப்பினர்களும், தங்களது தலைவர் பெயரை குறிப்பிட்டு பேசலாம் என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், கேள்வி நேரத்தின்போது, கட்சியின் தலைவர்களை பாராட்டி பேசுவது மரபில்லை என்றும், அந்த தவறை தாங்கள் முன்பு செய்திருந்தால், மீண்டும் அதை அதிமுக உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய சபாநாயகர் தனபால், கேள்வி நேரத்தின் போது கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை குறிப்பிட்டு பேசுவது ஏற்கனவே பின்பற்றப்பட்ட மரபு தான் என்றும், அதனால், சசிகலா பெயரை அவையில் குறிப்பிடுவது தவறில்லை என்றும் குறிப்பிட்டார்.
news7 thanks
No comments:
Post a Comment