அமெரிக்க வெள்ளை மாளிகையில் எச்1பி விசா மீதான புதிய மாற்றங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து 50,000 கோடி ரூபாய் வரை இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் இழந்தன.
: Tuesday, January 31, 2017, அமெரிக்க வெள்ளை மாளிகையில் எச்1பி விசா மீதான புதிய மாற்றங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து 50,000 கோடி ரூபாய் வரை இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் இழந்தன.
நடப்பு எச்1பி விசா விதிகளின் படி ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் 60,000 டாலர்கள் வரை ஊதியம் அளிக்க வேண்டும். ஆனால் புதிய விதிகளின் படி 1,30,000 டாலர்கள் சம்பளம் அளிக்கும் நிலைக்கு ஐடி நிறுவனவங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வருவாய் பாதிப்பு
இந்தச் சம்பள உயர்வை அளிக்க இந்திய ஐடி நிறுவனங்களுக்குச் சிரமமாக இருக்கும். எச்1பி விசா மூலமாக அமெரிக்காவிற்கு ஊழியர்களை இந்திய ஐடி நிறுவனங்கள் கொண்டு செல்வதால் 60 சதவீதம் வரை ஏற்றுமதி வருவாய் பெறுகின்றன, இப்போது அந்த வருவாய் குறையும்.
மும்பை பங்குச் சந்தையில் ஐடி நிறுவனங்களின் நிலை
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.47 சதவீதம் சரிவிலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.01 சதவீதம் சரிவிலும், எச்சிஎல் நிறுவனப் பங்குகள் 3.67 சதவீத சரிவிலும், விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 1.62 சதவீதமும், டெக் மகேந்திரா நிறுவனத்தின் பங்குகள் 4.23 சதவீதம் சரிந்தும் வர்த்தகம் செய்யப்பட்டன.
அமெரிக்கர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தினால் என்னவாகும்?
இந்திய நிறுவனங்களால் எச்1பி விசா இல்லாமல் வெளிநாட்டவர்களைப் பணிக்கு அமர்த்தாமல் அமெரிக்கர்களை மட்டுமே பணிக்கு அமர்த்த இயலும். ஆனால் அதிக அமெரிக்கர்களைப் பணிக்கு அமர்த்துவதும் அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்குப் பெறும் இழப்பை ஏற்படுத்தும்.
மிதமான வளர்ச்சி
பிரிக்ஸிட் பிரச்சனைகளுக்குப் பிறகு இந்திய நிறுவனங்கள் நிதனமான வளர்ச்சியை மட்டுமே பேற்று வரும் நிலையில் இப்போது எச்1பி விசா பெறும் சோதனையை ஏற்படுத்தி உள்ளது.
ஊழியர்களைத் திரும்ப அழைக்கும் நிலை
எச்1பி விசாவின் கீழ் அமெரிக்காவில் பணி புரியும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் அளிக்க வேண்டும் என்பதால் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைத் திரும்ப அழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எச்1பி மற்றும் எல்1 விசாக்களைப் பெற முடியாத அளவிற்கு விதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்1பி மற்றும் எல்1 விசாக்கள் பெறுவதற்கான விதிகளை மேலும் கடுமை படுத்துவதன் மூலம் பெரிதளவில் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் பணி புரிவது தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கின்றார்.
எச்1பி விசா என்றால் என்ன?
அமெரிக்கர்கள் அல்லாத வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் உள்ள தங்களது நிறுவனத்தில் பணிக்கு அமர்த்துவதற்காக அளிக்கப்படும் விசாகவே எச்1பி விசா என்று அழைக்கப்படுகின்றது. தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசாவை பெரிதும் பயன்படுத்துகின்றன.
news tamil.goodreturns thanks
No comments:
Post a Comment