பதிவு: பிப்ரவரி 13, 2017
.
சென்னை:
தமிழ்நாட்டின் ஆளும்கட்சியான அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா மற்றும் முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சசிகலா தனக்கு 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்று கூறி ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை வலியுறுத்தி வருகிறார். சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க தயார் என்று பன்னீர் செல்வம் கூறி வருகிறார்.
சமீபத்தில் சசிகலாவை ஆதரித்து பேட்டியளித்து வந்த சிலர் தற்போது அணிமாறி ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த 9 மக்களவை எம்.பி.க்களும், மாநிலங்களவையை சேர்ந்த இரு எம்.பி்.க்களுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கோபால கிருஷ்ணன் இன்றிரவு சென்னையில் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து, அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை ஆதரிக்கும் எம்.பி.,க்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

news maalaimalar thanks
No comments:
Post a Comment