பதிவு: பிப்ரவரி 13, 2017 18:01
தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந்தேதி மரணமடைந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில், கடந்த 5ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்அமைச்சராக வி.கே.சசிகலாவை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது வி.கே.சசிகலா முதல்அமைச்சராக பதவி ஏற்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னர் அவரை விடுதலை செய்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து பிப்ரவரி 14-ம் தேதி (நாளை) தீர்ப்பு வெளியாகும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்க உரிமை கோரியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என தெரியவந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் அன்றாட பணி அலுவல்கள் தொடர்பான நாளைய நிகழ்ச்சி நிரல் பட்டியலில் சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக டெல்லியில் இருந்து இயங்கிவரும் பிரபல செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
news maalaimalar thanks
No comments:
Post a Comment