தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பதவி ஏற்றாலும், மக்களிடையே இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கலையும் மனப்பான்மை உள்ளது என ஆளுநருக்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சனிக்கிழமை சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளதன் மூலமாக அவரது ஆட்சி தமிழகத்தில் தொடர்கிறது.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டசபை விதிகள் மீறப்பட்டுள்ளதாக பலரும் புகார்கள் கூறி வருகின்றனர்.
இந்த வாக்கெடுப்பானது சட்டசபை விதிகளுக்கு எதிரானது. மேலும் இரண்டு முறை அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை மூன்றாவது முறையாக கூடியது.
இவற்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் கொண்டு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை இரண்டு முறை முன் மொழிந்ததும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஒரே தீர்மானத்தை இரண்டு முறை முன்மொழிய முடியாது. 6 மாதம் கழித்து தான் ஒரே தீர்மானத்தை இரண்டாவது முறை முன்மொழிய முடியும் இதனால் முதல் தீர்மாணம் தோல்வியடைந்து விட்டது என்பதே அர்த்தம். இதனையும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டசபை விதிகள் பின்பற்றப்படவில்லை என ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் புகார்கள் குவிந்து வருகிறது. நடிகர் கமலஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் Rajbhavantamilnadu@gmail.com என்ற ஆளுநர் அலுவலக மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பலரும் ஆட்சியை கலைக்க கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டசபையில் நடந்தவை குறித்து சட்டசபை செயலாளரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம் கேட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் ஆட்சி தொடருமா, அல்லது கலைக்கப்படுமா என்ற பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தின் புதிய அரசை கலைக்கவேண்டும் என்று பலரும் கூறிவருவதால், எடப்பாடி மற்றும் சசிகலா தர்ப்பினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
NEWS=news.lankasri THANKS
No comments:
Post a Comment