இளமை பருவம் முதல் இல்லற பருவம் வரை ஒவ்வொரு பருவத்திலும் மன ரீதியாக, உடல்ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 30 வயதை கடந்த ஆண்களிடம் திடீரென ஏற்படும் மாற்றங்கள் எப்படி இருக்கும் அவை என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
முப்பது வயது ஆண்களிடம் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
- ஆண்கள் தனது 30 வயதை கடந்து விட்டால், அவர்களின் வீட்டில் உள்ள அனைவரை பற்றியும் யோசிப்பார்கள். அதிலும் சிறிய விஷயமாக இருந்தாலும் அதை ஆழ்ந்து சிந்தித்தப் பின் முடிவு செய்வார்கள்.
- முப்பது வயதை கடந்த ஆண்களுக்கு, அவர்களின் வாழ்க்கையில் அதிக அறிவுரைகள் தேவைப்படுவதால், எந்த ஒரு விஷயத்தையும் உடனே நம்பாமல், பலரிடம் கலந்தாலோசித்தே முடிவு எடுக்க நினைப்பார்கள்.
- பருவக்கல வயதில் அதிகமாக செலவுகள் செய்த ஆண்கள் 30 வயதைக் கடந்த பின் சில்லறைகளை கூட செலவிட மாட்டார்கள். பணத்தை எப்படி எல்லாம் சேமிக்கலாம், எதில் எல்லாம் முதலீடு செய்யலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.
- வீட்டில் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு பார்க்காமல் குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு அனுசரணையுடன் நடந்துக் கொள்வார்கள்.
- வீட்டை பற்றி மட்டும் நினைக்காமல், சமூகத்தில் ஏற்படும் விஷயங்கள் மீதும் அதிக கவனம் செலுத்துவார்கள். சமூகத்தில் ஏற்படும் தீங்கு, மாற்றங்கள் சுய வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை உண்டாக்கும் என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்றது போல நடந்துக் கொள்வார்கள்.
- ஒவ்வொரு ஆணும் முப்பது வயதை கடந்த பிறகு பெரிய மாற்றமாக காண்பது அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மீது கொண்டுள்ள தேடுதலுக்கான அறிவு தான். ஏனெனில் அதனால் நமது வாழ்விற்கான பலன்களை பற்றி தேடுவார்கள்.
news.lankasri thanks
No comments:
Post a Comment