பெண்ணின் முந்தைய காதல் விவகாரம் தெரிந்தும், மாமானார் வீட்டில் இருந்து கிடைக்கும் வரதட்சணைக்காக திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் ஏராளம்.
இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் வலுவான காரணம் ஆண்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
உதாரணம் இதோ
சங்கர் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்ணின் வயது 19. அவள் 16 வயதினிலேயே கார் ஓட்டுநர் ஒருவருடன் வீட்டை விட்டு ஓடிச்சென்றவள்.
இரண்டு நாட்கள் கழித்தே பொலிஸ் உதவியுடன் பெற்றோர் அவளை மீட்டெடுத்தனர்.
அன்றிலிருந்து 3 ஆண்டுகள் வீட்டுக்காவலில் அவளை வைத்திருந்த பெற்றோர், தற்போது சங்கருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால், இந்த ரகசியங்கள் அனைத்தும் சங்கருக்கு தெரிந்திருந்தும் திருமணத்திற்கு சம்மதித்துள்ளான். இதற்கு அவன் முன்வைத்துள்ள காரணம் இதோ, நகரத்தில் சம்பாதித்து சொந்த வீடு வாங்க முடியவில்லை, கார் வாங்குவோம்னு கற்பனைகூட செய்ய முடியலே! அதெல்லாம் வேணும்னா நான் அவளை கல்யாணம் பண்ணித்தான் ஆகவேண்டும்.
வீடும், காரும் வாங்கித்தருவதாக பெண் வீட்டில் சொல்லியிருக்கிறார்கள். எல்லாத்தையும் வாங்கி, வாழ்க்கையை அனுபவிக்கணும். ஹனிமூனுக்கு பாரீனுக்கும் அவள் பணத்திலேயே பறக்கணும். எப்போ கசக்குதோ அப்போ, அவளுடைய பழைய காதல் பிரச்சினையை புதுசா கேள்விப்பட்டது மாதிரி ஆரம்பிச்சி, அவமானப்படுத்தி துரத்திவிடனும்.
இதுதான் அவனின் சூப்பரான ஐடியா.
இப்படி பழைய காதல் பிரச்சினைகளை வைத்து, பெண்களின் வாழ்க்கையில் விளையாடி லாபம் பார்க்கும் ஆண்கள் ஏராளம்
.news.lankasri thanks
No comments:
Post a Comment