நேற்று (01/05/2022) நமதூரில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் முக்கிய தீர்மானமாக மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் ஆய்வு செய்வதை தடை செய்ய வேண்டி ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து கடற்கரையில் குடிசை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை அகற்ற அந்த துறை தொடர்பான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல் இன்னும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மிக முக்கிய அம்சமான தீர்மானமான மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மக்கள் மூலம் வலுவான எதிர் தீர்மானம் இயற்றி அது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அது அதிகாரிகளின் கவன ஈர்ப்பு தீர்மானமாக இருக்கும். குறைந்தபட்ச நபர்களை மட்டும் வைத்து தீர்மானம் நிறைவேற்றும் போது அது அரசு துறையில் எடுபடாமல் போக வாய்ப்புண்டு. கிராம சபை என்பது வலுவான அமைப்பாகும். அதன் தீர்மானம் என்பது வலுவானதாகும். இது மக்களாட்சியில் மக்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரம். ஆனால் நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில் போதுமான இளைஞர்களும் பெரியவர்களும் போதுமான அளவிற்கு வரவேயில்லை. இதற்கு நம் மக்களின் அக்கரையின்மையா அல்லது அவரவரின் வேலைப்பளுவா அல்லது இதற்கு போய் என்ன ஆகப்போகுது என்ற சிந்தனையா?தெரியவில்லை.
மீத்தேன் போன்ற திட்டத்தை வலுவிழக்க போதுமான எதிர்ப்பை கையெழுத்து மூலம் அரசுக்கு தெரியவைக்க வேண்டும் இது நமக்கு காலத்தின் கடமை. அதனால் இனி வரும் காலங்களின் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதை தனிமனித ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும்.
மேலும் ஆசணி குடியிருப்பு பகுதியின் வளைவில் மின் கம்பம் அகற்ற வேண்டி அந்தப் பகுதி மக்களும் நானும் பல முறை ஊராட்சி மன்ற கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தோம். இது தொடர்பாக அவரிடம் கேட்கும் போது, அந்த கம்பத்தை அகற்றுவதற்கு ஊராட்சி மன்றத்தின் மூலம் மின் வாரியத்திற்கு பணம் செலுத்தப்பட்டுவிட்டது ஆனால் மின்வாரியத்தில் இருந்து அகற்றுவது தொடர்பாக ஆர்டர் ஆகி வரவில்லை என்ற தகவலை ஊராட்சி மன்ற தலைவர் பதிவு செய்தார்.
சஹாப் அப்பாக்குட்டி
No comments:
Post a Comment