*பொதுப்பாதை தொடர்பான பொதுநலன் சார்ந்த கோரிக்கை பதிவு*
நமதூரில் நீண்ட நெடுங்காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பாதைகளின் இடங்கள் தற்போது அந்த இடத்தின் உரிமையாளர்களால் பட்டா நிலம் என்று முழுமையாக அடைக்கப்பட்டு வருகிறது. இதனால் நாம் முன்பு பொதுவாக பயன்படுத்தி வந்த பாதைகளின் இடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்கள் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி எளிதாக செல்லவேண்டிய இடங்களுக்கு கூட மேலும் பல தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
நில உரிமையாளர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்..... நிச்சயமாக அந்த இடங்கள் உங்களின் பட்டா இடமாகவே இருக்கட்டும் மேலும் அதை அடைப்பதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உண்டு என்றாலும், மக்கள் நலன், பொது நலன் மற்றும் எதிர்கால நலன் கருதி தயவுசெய்து பொதுப்பாதைக்கும் வழிவிட்டு அடைத்துக்கொள்ளுங்கள். இந்த உலக வாழ்க்கை என்பது நிரந்தரமில்லாத நிலையற்ற வாழ்க்கையாகும், மறுமை நாளே நிரந்தரமான வாழ்க்கை இதை கருத்தில்கொண்டு அல்லாஹ்வின் அருளை நாடி நற்காரியங்களை செய்து கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு நன்மை செய்வான் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
இது தொடர்பாக ஊராட்சி மன்றமும், முஸ்லிம் தர்ம பரிபாலன சபை ஜமாஅத்தார்களும் *தானாக முன்வந்து* இது தொடர்பான நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்தி நல்லது நடக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் இதேபோல் மற்ற நில உரிமையாளர்களும் அவரவர்கள் நிலத்தை அடைக்கும்போது இது பட்டா இடம் என்று சொல்லி இதே போன்று செய்ய ஆரம்பித்துவிட்டால் பொதுப்பாதை என்பது இல்லாமல்போய்விடும். அதனால் இந்த விசயத்தை எளிதில் கடந்து செல்லாமல் இதை ஒழுங்குபடுத்தி இனி வரும் காலங்களில் இது போன்றதை நன்மையாக அமைந்திடுமாறு ஊர் மக்கள் நலன் சார்ந்து கேட்டுக்கொள்கின்றேன்.
No comments:
Post a Comment