பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Thursday, 30 March 2023
உலகமே வியந்து பொறாமைப் பட்டு பொருளாதாரத்தில் உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜோப்ஸ் உடல்நலம் குன்றி தனது 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி: வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது! நோயுற்று மரண படுக்கையில் இருக்கும் நான் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. அதனால் எந்த வித பயனும் இல்லை!உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க, உங்கள் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் செய்ய எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வேதனைகளையும் வலிகளையும் பயத்தையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது!எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம், உடல் நலம் தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது!வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று உறுதி சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு திரை விழலாம். அழைப்பு வரலாம்!நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முடிந்தால் அதற்குள் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்!அதற்கும் இறைவன் அருள் வேண்டும்!செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான்!நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்! ஆறடி நிலம் கிடைக்காமல் நாறிப்போனவர்கள் எத்தனையோ!ஆகவே, உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள்!மனசாட்சியுடனும் நேர்மை உணர்வுடனும் சுவாசியுங்கள்!அதுதான் உண்மையான மன மகிழ்ச்சி! சத்தியமான மன நிம்மதி!நன்றி: Sakthi Sri
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment