பதிவு கொஞ்சம் நீளம் தான்..
ஆனால்!? நீங்கள் படித்தே ஆக வேண்டும். என்பது பொது விதி.!*
*இன்ஷாஅல்லாஹ்..!*
*மாநகராட்சியாகப் போகும் நம்ம முகவை.!*
*சாதாரண பாமர மக்களைக் கொண்டு...* *அந்நிய செலாவனி முதலீட்டில் ( வெளிநாடு வாழ் நம் மாவட்ட மக்களின் வருமானத்தால்) தமிழ் நாட்டிலே இரண்டாவது இடத்தில் நம் மாவட்டம் இருக்கிறது.!*
*நம் மாவட்டத்தில் இல்லாத வளங்களே இல்லை.!*
*கடல் சார்பு தொழில் கொண்டு, தரை சார்ந்த விவசாயம் முதல்...*
*தரைக்குள்ளே லிக்னட் (நிலக்கரி), கேஸ், பவர், போன்ற இயற்கை வளமும்,*
*புவி சார் குறியீடு பெற்ற நம் மாவட்ட குடை மிளகாயும்,*
*மருதம் சார்ந்த நம் மாவட்ட, வருசநாடு வெள்ளாடும் வரலாற்று சிறப்பாகும்.!*
*தமிழகத்திலே மிகப் பெரிய இரண்டாவது நீர் தேக்க விவசாய பாசன கண்மாய்... நம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கன்மாய் என்பதும் மற்றொரு தனிச் சிறப்பு.!*
*அதிகமான CBSC பள்ளிகளையும், தனியார் கல்லூரிகளையும், மருத்துவம், மற்றும் பொறியியல் கல்லூரிகளையும் கொண்ட மாவட்டம் நம் முகவை மாவட்டம்.!*
*சென்ற கல்வியாண்டில் +2, 10-th மாணவர்கள் தமிழக அளவில்... நம் முகவை மாவட்டம், மூன்றாவது இடம் பிடித்தது ஒரு மைய்ல் கல்.!*
*வரலாற்று சிறப்பு மிக்க பாம்பன் பாலம் ஒரு தனி சிறப்பு.!*
*இப்போது எல்லா ஊர்களில் இருக்கும் பிராட் கேஜ் இரயில் வருவதற்கு முன்னாடியே... நம் தனுஷ்கோடிக்கு அப்பவே சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை மீட்டர் கேஜ் இரயில் ஓடியது...*
*2000 ஆண்டு வரை, சென்னையிலிருந்து தனுஷ்கோடி மார்க்கமாக ஶ்ரீலங்காவிற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைமுறையில் இருந்தது.. அப்போது DMK MP-யாக இருந்த T.R.பாலு மற்றும் G.K.வாசன், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த நல்ல திட்டத்தை, அமரர் ஜெயா அம்மையார் பாதுகாப்பை காரணம் காட்டி தடை செய்ததும் வருத்தமான வரலாறு.!*
*சேது சமுத்திர திட்டத்தை கலைஞர் முனைப்பாக கொண்டு வர துடித்ததே... இராமேஸ்வரம் சுற்றுலா துறையை மேம்படுத்த தான்.... ஆனால் சங்கிகள் இன்று வரை முட்டுக் கட்டை போட்டு வருவதும் வருத்தமான செய்தியே.!*
*உச்சிபுளி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து மலேஷியா, துபாய், மற்றும் சவூதிக்கு நேரடி பிளைட் விட, நம்ம MP நவாஸ் கனி அவர்கள் ஒன்றியத்துக்கு இதுவரை அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது நன்றே.!*
*நம்ம மாவட்ட பேருந்து நிலையத்திலிருந்து தமிழகம் அனைத்து ஊர்களுக்கும், பேருந்து வசதி இருப்பது நல்ல செய்திகளில் ஒன்று.!*
*இரமநாதபுரம் இரயில் நிலையத்திலிருந்து... இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இரயில் வசதி இருப்பது, வடக்கனை வாழ வைக்க... இது ஒன்றியத்தின் உதவி.!*
*கடலோர மார்க்கமாக ECR சாலையும், நகர் & கிராமப்புற மார்க்கமாக பைபாஸ் சாலையும் ஒன்றாக அமைந்த மாவட்டம் நம் முகவை மாவட்டம் என்பது ஆச்சிரியம்.!*
*இராமேஷ்வரம் கோவிலும், ஏர்வாடி தர்ஹாவும், இராமநாதபுரம் ரோமன் சர்ச்சும் மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.!*
*குட்டி சிங்கப்பூர் என... கூத்தாநல்லூருக்கு அடுத்தபடியாக கீழக்கரையையும், தொண்டியையும், எஸ்.பி.பட்டினத்தையும் பிற மத மக்கள் புகழ்ந்து பேசுவதும் ஒரு வேடிக்கையான நகைச்சுவை உண்மைதான்.!*
*கரகாட்ட கூத்தாடி தொண்டி ஃபாத்திமாவும், திரைப்பட கூத்தாடிகளான கமலஹாசனும், ( பரமக்குடி) விக்ரமும், ( பரமக்குடி) இயக்குனர் R.K.சுரேஷ் (வளநாடு) பிறந்த மாவட்டம் நம் முகவை.!*
*அரசியல் செண்டிமெண்டாக... ஆளும் கட்சி வேட்பாளர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால்... அளும் CM உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்ற பலிச்சொல் சட்டசபை தொகுதியான திருவாடானையை உள்ளடக்கிய மாவட்டம் நம் முகவை.!*
*நான் கமுதி தொகுதியில் படுத்துக் கொண்டே ஜெய்ப்பேன்...! என கலைஞர் சூளுரைத்தார்...! காரணம்.!? "கமுதி" என்பதை திருப்பி போட்டால் "திமுக" என வரும் என்று... ஆருடம் சூட்டிய ஊரைக் கொண்டது நம் முகவை.!*
*இராமநாதபுரம் மன்னர் சேதுபதி அரண்மனையும்.... அவர்களின் வம்சாவளி இரண்டு பெண்களின் நினைவு ஊராக அக்காள் மடம், தங்கச்சி மடமும் அமைந்திருப்பது சிறப்பு.!*
*1967 புயலில் தனுஷ்கோடி மட்டும் அழியாமல் இருந்திருந்தால்... இன்று நிலமையே வேறு.!*
*சுற்றுலா துறையில் நம் மாவட்டம் முதலிடத்தில் இருந்திருக்கும்.!*
*சென்னை, விசாகப்பட்டின துறைமுகங்களை தூக்கி சாப்பிட்டிருக்கும் நம் தனுஷ்கோடி துறைமுகம்.!*
*வடக்கே வளர்கிறது.! தெற்கே தேய்கிறது..!! என அப்போதைய முதல்வர் அண்ணாதுரைக்கு.. (ஒரே கட்சியாக இருந்தாலும்) எதிராகவே குரல் கொடுத்த கலைஞர்... தலைமை செயலகத்தை, தூத்துக்குடி, மதுரை, இராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு மாற்றுங்கள் என்றார்.!*
*எல்லாமே கனவாகி போக... இப்போது நம் இராமநாதபுரம் மாநகராட்சியாகப் போகிறது பெருமை என்றாலும்... வரி அதிகமாகும். ரியல்எஸ்டேட் சிறப்பாக இருக்கும்.. "ரா மெட்டிரியல் மற்றும் கட்டுமான பொருட்கள் விலை அதிகமாகும்.. அதே நேரத்தில வடக்கன்ஸ் வருகையும் அதிகரிக்கும்.!*
*எது எப்படியோ!? நல்லது நடந்தால் ஓகே தான்.! வெறும் நெகட்டிவ்வை மட்டும் பேசாமல் பாசிட்டிவாக யோசித்தால்... தொழில் துறை பெருக நிறைய வாய்ப்புள்ளது... எல்லாமே நம் மாவட்ட மக்கள் கையில்தான் உள்ளது.!*
*அதிகமான இஸ்லாமிய மக்கள் வாழும் நம் மாவட்டத்தில் மட்டும்... 7 ஆலிம் பட்டம் கொடுக்கும் அரபிக் கல்லூரிகள் அல்லாஹ்வின் கிருபையால் இயங்குகின்றன.*
*கீழக்கரை அருஷியா அரபுக் கல்லூரி தான்... தமிழகத்தின் தாய் கல்லூரி.. வேலூர் பாக்கியாத்திற்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டது.. ஆனால், ஏனோ சில காரணங்களால்... சில ஆண்டுகள் இயங்காமல் போன அந்த கேப்பில்... வேலூர் பாக்கியாத் - தாய் கல்லூரி என பெயர் எடுத்து விட்டது..! இவ்வுண்மை தமிழக அநேக மூத்த அரபிக் கல்லூரி பேராசிரியர்களுக்கு நன்றாகவே தெரியும்.. நம் உலமா சபை மாநில தலைவர் முதன்முதலில் கல்வி கற்றது கீழக்கரை அருஷியாவில்தான்.!*
*(1- அருஷி - கீழக்கரை.*
*2- ஸதகி - கீழக்கரை.*
*3- அதாயி - கீழக்கரை.*
*4- சித்தாரி - சித்தார்கோட்டை.*
*5- ஹக்கானி - தேவிபட்டினம்.*
*6- அஜ்ஹரி - தொண்டி.*
*7- குத்சி - எஸ்.பி.பட்டிணம்.)*
*50 பதுக்கும் மேற்பட்ட ஹாஃபிழ் மதரஸாக்கள்.*
*100 க்கும் மேற்பட்ட நிஸ்வான்... (பெண்கள்) மதரசாக்கள் நடந்து கொண்டிருக்கிறது.*
*மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிப்பதே நம் இஸ்லாமிய ஓட்டுகள் தான்.! நாம் ஒற்றுமையாக இருக்கும் வரை..!!*
ஆக்கம்: முகவை ரஹிமி.
பேஷ் இமாம்: சோழந்தூர்.
Thanks
No comments:
Post a Comment