பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Wednesday, 22 March 2023
#வாழைப்பழம்_சாப்பட்டால் சளி பிடித்துக்கொள்கிறது என்று கூறி நாம் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறோம். உண்மையில், வாழைப்பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப்பழத்தை உண்டு வந்தால், ஒரு வாழைப்பழத்தில் 75 % தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16 %, வைட்டமின் C 15 % மற்றும் பொட்டாசியம் 11% உள்ளது. இதில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது. இதன் தோலை மீறி எந்த ஒரு கிருமியும் உள்ளே செல்ல முடியாத பாதுகாப்பு நிறைந்த இயற்கையின் அற்புதப்படைப்பு. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்த சோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது. தோலின் உட்புறத்தை, நமது சருமத்தின் மீது தேய்த்தால் கொசு நம்மை அண்டுவதில்லை.வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன. மது குடிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்கின்றது. நினைவு ஆற்றலை தக்கவைத்துக் கொள்வதில் வாழைப்பபழம் பெரும்பங்கு வகிக்கிறது.வாழைப்பழத்தில் உள்ள B6 மற்றும் B12 வைட்டமின்கள், புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவும். கடுமையான வயிற்றுப் போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலைப் போக்கவும் வாழைப்பழம் அரு மருந்தாகத் திகழ்கிறது."வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பை, 40 % குறைக்க முடிகிறது"வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் புண் ஏற்படுவதையும் வாழைப்பழம் தடுக்கிறது. வாழைப்பழம் கிடைக்காத சில நாடுகள் கூட பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துகிறார்கள்.ஆனால் நாம் வாழைப்பழத்தில் இருக்கக் கூடிய ஆற்றல்களை அனுபவத்தில் அறியாது அதனை உதாசீனப்படுத்துகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment