பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Monday, 20 March 2023
காலையில் கப்று தோண்டும் போது அவருக்கு தெரியாது, இந்த கபுறில் தன்னுடைய ஜனாசா அடக்கம் செய்யப்படும் என்பது.பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் அருகில் உள்ளது பழைய லெகிடி ஜமாஅத். அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் செய்யும் சமூக பணிகளில் கப்று தோண்டுவதும் ஒன்று. இடைப்பட்ட நாட்களில் ஊரில் யாராவது மரணித்தால் அடக்கம் செய்ய வசதியாக கப்று தோண்டி தயாராக வைப்பது வழக்கம். அதுபோல நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் கப்று தோண்டும் பணியில் அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம் எம் நிசாத் என்பவரும் இணைந்து பணியாற்றினார். அபுதாபியில் பணியாற்றி வந்த நிசாத் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளவர் இளைஞர்களின் பணிகளை ஊக்குவிப்பவர். கப்று தோண்டும் பணி பூர்த்தி செய்து இல்லம் திரும்பிய நிசாத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வஃபாத் ஆன சோகம். காலையில் நிசாத் தோண்டிய கபுறிலேயே மாலை அவரது ஜனாசாவை அடக்கம் செய்ய வெண்டி வந்ததை அடுத்து ஊர் மக்களுக்கு தாங்கொணா துயரம். இவ்வளவுதான் வாழ்க்கை என்பது தெரியாமலேயே நாட்களை நகர்த்தி வருகிறோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment