அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 29 January 2026

நமது ஊரைச் சார்ந்த இசை அமைப்பாளர்

நமது ஊரைச் சேர்ந்தவர்கள் ஒரு துறையில் சாதிக்கும்போது அவர்களைக் கொண்டாடுவது நமது மரபு. ஆனால், சில நேரங்களில்  திறமையாளர்கள் நம் கண்ணெதிரே இருந்தும், கவனிக்கப்படாமல் போவது ஆச்சரியமே. 

அப்படி கவனத்திற்கு வராமல் இருக்கும் ஒருவர் புதுவலசையை சேர்ந்த இசை அமைப்பாளர் ஷாஹித் ரஹ்மான்.
இவரை பற்றி பலருக்குத் தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம். தமிழ், மலையாளம், ஹிந்தி மட்டுமின்றி ஆங்கிலப் பாடல்கள்  இசைத் துணுக்குகள் அவரின் இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களில் நிறைந்து இருக்கிறது.

https://www.instagram.com/thisisshaheedrahman?igsh=ajMydmUwcW41Z2Fx

 "ஆசைய காற்றுல தூதுவிட்டு" பாடலின் இசை வடிவம் (Instrumental)  குறிப்பாக அதில் ஒலிக்கும் புல்லாங்குழல் இசை, அற்புதம். https://youtu.be/-m3i2DsHt1k?si=xk3FczEi8L8gfmU1

 இசைத் திறமைக்குச் சான்றாக அவரது 14 ட்ராக் கொண்ட 'Let Me Say That Again" என்னும் இசை ஆல்பத்தை சொல்லலாம் இதில் 5-வதாக வரும் "தி சேஸ்" (The Chase) - 20:47 நிமிடத்தில் தொடங்கும் அந்த இசை, அட்ரினலின் வேகத்தை அதிகரிக்கும் ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் பிஜிஎம் (BGM) போன்றது. இசைக்கருவிகளின் ஆதிக்கம் ஒருபுறம், அந்த விஷுவல் தரும் வேகம் மறுபுறம் என நம்மை ஒரு சேஸிங்கில் இருப்பது போன்ற உணர்வைத் தரும். குறிப்பாக 23:20 நிமிடத்தில் மீண்டும் வேகமெடுக்கும் அந்தப் புள்ளி வியக்க வைக்கும்.
https://m.youtube.com/watch?v=ZJzbKMD_Eeo

படைப்பாளிகளுக்கு ஒரு வேண்டுகோள்
புதுவலசையில் எத்தனையோ திறமையான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்கள் இருக்கிறீர்கள். உங்கள் வீடியோக்களுக்குத் தரமான இசையைத் தேடும்போது, நம் மண்ணின் கலைஞரான இவரின் இசையைப் பயன்படுத்துங்கள். அவருக்கு உரிய 'கிரெடிட்ஸ்' (Music Credit) வழங்குவதன் மூலம், இந்த  இசை இன்னும் பலரைச் சென்றடையும்.

திறமை எங்கு இருந்தாலும் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். நம் ஊர் கலைஞனை உலகறியச் செய்யலாமே.
  - அன்வர் ராஜா.

No comments:

Post a Comment