Ramanathapuram செவ்வாய்க்கிழமை, ஜனவரி 22,
ராமநாதபுரம், ஜன. 22-
ராமநாதபுரம் அருகே உள்ளது களரி. இந்த பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் முகேஷ்குமார் (வயது18). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் முதல் ஆண்டு படித்து வந்தார். இவர் ராமநாதபுரத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வந்தார்.
நேற்று முகேஷ்குமார் கல்லூரிக்கு செல்லவில்லை. மாலையில் அவர் தங்கி இருந்த அறை கதவு சாத்தப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது மாணவர் முகேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கு வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து ராமநாதபுரம் பி-1 போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்ற பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் முகேஷ்குமார் படித்த கல்லூரியில் மாணவர் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
அவரும் முகேஷ்குமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். நண்பர் இறந்துவிட்டதால் முகேஷ்குமார் மனவேதனை அடைந்தனர். நண்பரின் பிரிவை தாங்க முடியாமல் முகேஷ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

maalaimalar. thanks
No comments:
Post a Comment