அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 March 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள் : சல்மான் விளக்கம்



ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை திருத்தம் செய்ய இந்திய எடுத்த முயற்சிகள் குறித்து,  வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்துள்ளார்.

ஐநா மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவந்துளள தீர்மானத்தை மிகவும்  வலுவுள்ளதாக மாற்ற  சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும், அமைப்புக்களும், பொதுமக்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்னமும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன.

ஆனால் இந்தியா அப்படி எதுவும் திருத்தம் கொண்டுவராமலே அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து உள்ளது. இந்த தீர்மானம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நேரத்தில், மத்திய வெளியுறவுத் துறை  அமைச்சர் சல்மான் குர்ஷித் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர், "ஜெனீவாவில் இந்தியா எடுத்துக் கொண்ட முயற்சிகள் திருப்தி அளிக்கிறது. இந்த தீர்மானத்தில் சுதந்திரமான நம்பத் தகுந்த விசாரணை வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் 'சர்வதேச சமூகம் திருப்தி அடையும் வகையில்' என்ற வாசகங்கள் இந்தியாவால்தான் சேர்க்கப்பட்டன.

ஐநா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட பின்னர், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது. மிகவும் வலுவான வார்த்தைகளுடன், தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு சீர்குலைக்கப்பட்டது. இந்தியாவுக்கும் இதனால் பெரிய அவப்பெயர் ஏற்பட்டது.  தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்பாக அதில் மாற்றங்கள் செய்யவும், ஆதரவு திரட்டி அந்த தீர்மானம் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவும் முயற்சிப்பதுதான் சிறந்தது.
இலங்கையுடனான் உறவு இந்தியாவுக்கு மிக முக்கியம். இந்தியா இலங்கையுடன் இணைந்து செயல்பட்டுத்தான், அங்குள்ள தமிழர்கள் மறுவழ்வு பெறுவதற்கும், அரசியல் உரிமைகள் பெறுவதற்கும் இந்தியா பாடுபட முடியும்." என்று கூறியுள்ளார்

4tamilmedia. thanks
.

No comments:

Post a Comment