அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 20 March 2013

சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தர காங்கிரஸ் முடிவு


சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தர காங்கிரஸ் முடிவு


March 20, 2013  11:00 am
இலங்கையில் நடந்த போரின்போது தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா ஆதரவு வழங்கும் என இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவியான சோனியா காந்தி நேற்று அறிவித்தார். 


ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் இலங்கை மீதான பிரேரணை தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றது என்று இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்துவரும் நிலையிலும்,மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியேறியுள்ள நிலையிலும் காங்கிரஸ் கட்சித் தலைவியான சோனியா நேற்று இந்த அறிவிப்பை விடுத்தார்.

எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராடிவரும் நிலையில் அவைபற்றி ஆராய்வதற்கென நேற்றுக்காலை காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் சோனியாகாந்தி. 

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதுதொடர்பில் தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அங்கு உரையாற்றிய சோனியா காந்தி, "இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம். இலங்கையில் நடந்த போரில் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த இந்தியா ஆதரவு வழங்கும். 

அதில் நாங்கள் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளோம்.´´ என்று கூறினார். "எமது இதயங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளன. 2009இல் போரின் இறுதி நாள்களில் அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சொற்களால் விபரிக்க முடியாத கொடூரங்கள் குறித்து வெளியாகும் அறிக்கைகளால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதனால் தான் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான,நடுநிலையாக விசாரணைகளை நாம் கோருகிறோம். தமிழர்களுக்கு சம உரிமை, சமமான பாதுகாப்புக்கு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி காலத்தில் இருந்தே எமது ஆதரவு உள்ளது.

அவர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவது வருத்தமளிக்கிறது.´´என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு எதிரான கடும்போக்கை முதல் முறையாகச் சோனியா காந்தி வெளிப்படுத்தியுள்ளதாகவும்,இது வழக்கத்துக்கு மாறானது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மைக்காலத்தில் இந்தியாவின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் பகிரங்கமாக, இலங்கைக்கு எதிராக கடுமையான தொனியில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை இதுவே முதல்முறை என்று ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மத்திய ஆட்சியில் இருந்து திமுக விலகினாலும் மத்திய அரசுக்கு பாதிப்பு ஏற்படாது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியும்,சமாஜ்வாதி கட்சியும் தாங்கள் தொடர்ந்து ஆதரவு தருவோம் என்று உறுதி அளித்துள்ளதால், ஆட்சிக்குப் பாதிப்பு இருக்காது என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெளியில் இருந்து 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு230 இடங்கள் உள்ளன.

இலங்கை தொடர்பாக முடிவெடுக்க காலம் இருக்கும் நிலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்வதற்கு முன்பே தி.மு.க முடிவு வந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

thamilan. thanks

No comments:

Post a Comment