March 23,
2013
மருத்துவர் ஒருவர் பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்த போது
பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று கூறி, அவருக்கு அந்தப் பெண்ணின் உறவினர்கள் தர்மஅடி
கொடுத்துள்ளனர்.
இந்தியாவின் காஸியாபாத் இந்திரபுரத்தில் வைத்தியர் அம்ரிஷ்
தியாகி, தனது
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணை, தனி
அறையில் சோதித்தார் என்றும், அப்போது
அந்தப் பெண்ணிடம் அவர் தவறாக நடந்துகொண்டார் என்றும் அந்தப் பெண் தனது கணவரிடம்
கூறினார்.
இதை
அடுத்து, டாக்டர்
தியாகியின் கிளீனிக்குக்குச் சென்ற அந்தப் பெண்ணின் உறவினர்கள், கிளீனிக்கை சேதப்படுத்தி,
வைத்தியரையும் அடித்து உதைத்தனர். இதில்,
அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை
அடுத்து, பொலிஸில் புகார் அளித்த வைத்தியர் தியாகி, தான்
அந்தப் பெண்ணுக்கு சாதாரண முறையில் மருத்துவ சோதனைகள் செய்ததாகவும், தான்
அப்பாவி என்றும் கூறி,
தன்னைத் தாக்கிய பெண் மீதும், உறவினர்கள் மீதும் புகார் அளித்தார்.
அதுபோல், தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதாக அந்தப் பெண்ணும் பொலிஸில்
புகார் அளித்தார். பொலிஸார் இது குறித்து இருதரப்பிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
/thamilan. thanks
No comments:
Post a Comment