அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 20 March 2013

சர்வதேச அளவில் இந்திய பல்கலைக்கழகங்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு



காசிபூர்

சர்வதேச அளவில் இந்திய பல்கலைக்கழகங்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
உத்தரகாண்ட் மாநிலம் காசிபூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.) நிறுவப்பட்டது. இதன் முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– சர்வதேச அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் 200 இடத்தில் இந்திய பல்கலைக்கழகம் எதுவும் இடம் பெறவில்லை. நமது முயற்சிகள் இந்திய பல்கலைக்கழகங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதாக இருக்க வேண்டும்.

தற்போதைய கல்வி நிறுவனங்கள் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை. உலக கல்வி தரத்துடன் போட்டியிட்டு இந்திய கல்வி நிறுவனங்கள் வெற்றி பெற்று முதல் தரத்துடன் விளங்க வேண்டும். இதன் மூலம் இந்திய வணிகம் ஆரோக்கியமான வளர்ச்சியை பெற வேண்டும். துரதிருஷ்டவசமாக தற்போதைய கல்வி தரம், நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை. 2006–2007–ம் கல்வி ஆண்டில் வணிகம் மற்றும் நிர்வாகவியல் மாணவர்களின் எண்ணிக்கை 23 லட்சமாக இருந்தது. இது 2011–2012–ம் கல்வி ஆண்டில் 34 லட்சமாக உயர்ந்தது.

இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிக அளவில் உயர வேண்டும். அப்படி உயர்ந்தால்தான் நாடு, தனது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். சிறந்த கல்வியை உருவாக்குவதற்கான மாறுதல்களை செய்வதில் பல்கலைக்கழகங்கள் ஈடுபடவேண்டும். துரதிருஷ்டவசமாக இந்த விஷயத்தில் மிகவும் மெதுவாகவே செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

2012–ம் ஆண்டில் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வந்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரம் பேர். ஆனால் சீனா, ரஷியா நாடுகளின் 6 லட்சம் பேர் படிக்கின்றனர். நமது கல்வியின் தரத்தை உயர்த்த ஆய்வு நடத்தி நல்ல மாறுதல்களை செய்ய பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும். இங்கு பட்டம் பெற்ற மாணவர்கள் இதை செய்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

kalaisolai-valarkalvi thanks

No comments:

Post a Comment