பாகான் டத்தோ, 23 மார்ச்- சூலு ஊடுருவல்காரர்களின்
தலைவரான ஜமாலுல் கிராமை கொல்வதற்காக கமாண்டோ குழு ஒன்று பிலிப்பைன்ஸுக்கு அனுப்பப்
பட்டுள்ளதாக கூறப்படுவதில் முற்றிலும் உண்மையில்லை என தற்காப்பு அமைச்சர் டத்தோ
ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் தெரிவித்துள்ளார்.
"பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் மலேசியா ஒருபோதும் அத்துமீறி
நுழையாது. அதே நேரத்தில், மற்ற நாட்டில் அத்துமீறி நுழைந்து அந்நாட்டு மக்களின்
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சூலு ஊடுருவல்காரர்கள் அளவுக்கு மலேசிய
இராணுவத்தினர் மோசமானவர்கள் அல்லர் என்றும் அமைச்சர் தெளிவுறுத்தினார்.
"எனவே ஜமாலுல் கிராம் III பயப்படத்தேவையில்லை. நாங்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் அத்துமீறி நுழைய மாட்டோம். அடுத்த நாட்டில் படுகொலை
நடத்தும் உங்களைப் போன்று நாங்கள் மோசமானவர்கள் இல்லை" என்றார் டத்தோ ஸ்ரீ டாக்டர்
அஹ்மாட் சாஹிட் கூறினார்.
vanakkammalaysia thanks
No comments:
Post a Comment