அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 18 March 2013

வாகனம் ஓட்டும்போது செல்போனில் SMS அனுப்புவதைத் தடுக்க புதிய கருவி


வாகனம் ஓட்டும்போது செல்போனில் SMS அனுப்புவதைத் தடுக்க புதிய கருவி


March 18, 2013  05:28 pm
செல்போனில் பேசிகொண்டே வாகனம் ஓட்டும்போது கவனம் சிதறி விபத்துகள் ஏற்படுவதால் அதை தடுக்கும் வகையில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. என்றாலும், செல்போன்களில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதும், சிலர் எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் வழக்கமாக உள்ளது.




இதனைத் தடுக்கும் விதமாக, அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள நிறுவனம் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவி வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ´´ஓரிகோ சேப்´´ எனப்படும் இந்தக் கருவியில் ஓட்டுனர் தனது செல்போனைப் பொருத்தினால் என்ஜின் இயங்கத் தொடங்கும். வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது,ஓட்டுனர் புளுடூத் மூலம் போனில் வரக்கூடிய அழைப்புகளை ஏற்று பேசலாம்.

ஆனால், திரும்ப போன் செய்யவோ அல்லது எடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பவோ முடியாது. அப்படி எடுத்தால், அதில் உள்ள அலாரம் இயங்கி அதனுடைய செயல்பாடுகளைக் கண்காணிப்பவருக்குத் தகவலாக தெரிவித்துவிடும். வண்டியும் நின்றுவிடும். கண்காணிப்பாளர் வந்து திறந்தால் மட்டுமே மறுபடி வாகனத்தை இயக்கமுடியும்.

வண்டி நின்றிருக்கும்போது இந்தக் கருவி செயல்படாது. அப்போதுதான் ஓட்டுனர் தனது போனை உபயோகிக்க முடியும். இந்த பாதுகாப்பு கருவியின் விலை (பொருத்துவது உட்பட) 279 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


thamilan. thanks

No comments:

Post a Comment