First Published : 22 April
2013
-
சீனாவின் சிச்சுவான் மாகாணம், யான் நகரம், குயிங்ரென் பகுதியில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு வரும் நிவாரண குழுவினர். நாள்: சனிக்கிழமை.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள்
எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10,500 பேர் காயமடைந்துள்ளனர்.
சிச்சுவான் மாகாணம், லுஷான் மாவட்டத்தில் உள்ள யான் நகரில் சனிக்கிழமை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக பதிவானது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் பல மணிநேரம் காத்திருந்தனர்..
மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
கட்டட இடிபாடுகளில் இருந்து 90 பேர் மீட்கப்பட்டனர். 600-க்கு மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. சீனப் பிரதமர் லீ கெகியாங் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு
ஆறுதல் கூறினார். கடுமையாக பாதிக்கப்பட்ட லுஷான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள், மருத்துவமனைகளுக்குச் சென்று அவர் ஆறுதல் கூறினார்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க முன்னுரிமை தரும்படி அவர் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 ஆயிரம் கூடாரங்கள், 800 தற்காலிக குடியிருப்புகளை வழங்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்..
இதற்கிடையே சீனாவின் மஞ்சள் கடலில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 அலகுகளாக பதிவானது.
news dinamani thanks

No comments:
Post a Comment