Monday, 22 April 2013 00:56

இன்று ஏப்ரல் 22ம் திகதி சர்வதேச பூமி தினமாக (World Earth Day) கொண்டாடப்படுகிறது.
இவ்வருடத்திற்கான பூமி தினத்தின் கருப்பொருளாக காலநிலை மாற்றம் மையப்படுத்தப்படுகிறது.
இதையொட்டி பூமி தினம் நெட்வேர்ட் குழுவினர் தமது இணையத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உலகெங்கும் இருந்தும் பெருமளவிலான மக்கள் பங்கெடுத்து வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தால் நீங்கள் பாதிப்படைந்திருக்கிறார்களா? அப்படியாயின் இப்பிரச்சினையை கட்டுப்படுத்த என்ன செய்திருக்கிறீர்கள், அல்லது என்ன செய்யப்போகிறீர்கள் என புகைப்படங்களுடன் அனுப்பிவைக்குமாறு இவர்கள் கோருகின்றனர். விரிவாக எழுதுவதற்கு எல்லாம் நேரம் இல்லை என நினைக்கிறீர்களா? உங்களது ஸ்மார்ட் போனை எடுங்கள், நீங்கள் தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ இணைந்து படம்பிடித்து 'The Face of Climate Change' எனும் கையெழுத்துக்களுடன் இவர்களுக்கு அனுப்பிவையுங்கள். அனுப்பும் புகைப்படங்களை அவர்கள் The Face of Climate Change Wall உருவாக்குவதற்கு பயன்படுத்தப்போகிறார்கள். இணைப்பு : http://theadvocator.com/earthday/
அதோடு அப்புகைப்படங்களை உங்களது சமூக வலைத்தள அக்கவுண்டுக்களிலும் பிரசுரியுங்கள். உங்கள் நண்பர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொள்வார்கள். அவர்களுக்கும் இன்றைய பூமி தினம் பற்றி தெரியவந்துவிடும்.
ஒவ்வொருவரும் நீங்கள் தனிநபர்களாக செய்யும் இந்த சின்ன சின்ன கவனயீர்ப்பு விடயங்கள் பாரிய சுற்றுச்சூழல் மாற்ற முயற்சி ஒன்றுக்கு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் என பூமி தினக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நீங்களும் பூமியை பாதுகாக்க விரும்புகிறீர்களா? உடனடியாக இந்த இணைப்பில் சென்று உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.
இன்றைய சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு கூகுள் இணையத்தளமும் தனது டூடுளை மாற்றி அமைத்திருக்கிறது.
சர்வதேச பூமி தினம் எப்படி, எங்கு தொடங்கியது?
1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதி, சுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் ஒன்றிணைந்து சூழல் பாதுகாப்பு இயக்கம் ஒன்றை ஆரம்பித்தனர். இன்று 192 நாடுகளில் 22,000 சமூக சேவகர்களுடன் இந்த இயக்கம் வளர்ந்துள்ளது. இவர்களது இயக்கத்தின் மூலம் சுமார் 1 பில்லியன் பேர் பூமியை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் வருடந்தோறும் மேற்கொள்கின்றனர்.
இணைப்பு http://theadvocator.com/earthday/
மேலதிக விபரங்களுக்கு : http://www.earthday.org/2013/
4tamilmedia thanks
No comments:
Post a Comment