அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 21 April 2013

ஒருநாள் முழு அடைப்பு - 5500 கோடி இழப்பு


ஒருநாள் முழு அடைப்பு -  5500 கோடி இழப்பு April 21, 2013  02:54 pm
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மராத்தான் ஓட்டப்பந்தயத்தின் போது 2 குண்டுகள் வெடித்தன. அதில் 3 பேர் உயிரிழந்தனர். 176 பேர் காயம் அடைந்தனர். 


 
 இதுதொடர்பாக கண்காணிப்பு காமிரா மூலம் குண்டு வைத்த 2 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். மற்றொருவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி விட்டான். அவன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டவன் தம்பி எனவும், பெயர் ஷோக்கர் சார்நேவ் (19) என்றும் தெரிய வந்தது.

அவன் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு மனித வெடிகுண்டாக சுற்றி திரிகிறான் என போலீசார் அறிவிப்பு செய்தனர். எனவே, அவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனவே, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அதுதவிர தப்பி ஓடிய தீவிரவாதியை பிடிக்கும்வரை கடைகள் மற்றும் வர்த்தக நிவனங்களை திறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆகவே பாஸ்டன் நகரில் கடைகள் அடைக்கப்பட்டன. இதற்கிடையே,மறுநாளே வாட்டர் டவுன் என்ற இடத்தில் படகுக்குள் பதுங்கி இருந்த ஷோக்கரை போலீசார் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து நேற்று மீண்டும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. ஆனால் நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் நடந்த முழு அடைப்பினால் பாஸ்டன் நகரில் ரூ.5500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

thamilan thanks

No comments:

Post a Comment