April 21, 2013 04:27 pm
துபாய்
நாட்டில் இனி பெண்களுக்கென அந்நாட்டின் கடற்கரைகளில் இரு தினங்கள் தனியாக
ஒதுக்கப்படுகின்றன. இந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. அவர்களின்
கலாசாரத்தையும்,மத உணர்வுகளையும் காப்பாற்றும் வண்ணம் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
துபாயின் இரண்டு கடற்கரைகளில் ஒன்றான அல் மம்ஜாரில் ஞாயிறு
மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும், மற்றொரு
கடற்கரையான ஜுமைராவில்,
திங்கள் மற்றும் புதன்கிழமைகளிலும் பெண்கள் மட்டுமே நடமாடமுடியும். நான்கு
வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு அங்கே அனுமதி இல்லை. அங்குள்ள பெண்
காவலர்கள் மட்டுமே அந்த நாட்களில் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
துபாய் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணிகாக்க நீந்தி மகிழும்
விதமாகவும், அந்நியர் தலையீடு
இன்றி சுதந்திரமாக எண்ணவும், இந்த
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக துபாயின் கலாசாரத்துறை நிர்வாக இயக்குனர் அஹமத் அப்துல்
கரீம் தெரிவித்தார்.
இதுமட்டுமில்லாமல், வெளிநாட்டு பெண்களும், உள்நாட்டு பெண்களும் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப நீச்சல் உடைகள் அணிந்து கொள்வதற்கு
தோதாக,தனித்தனி இடங்களாகவும் கடற்பகுதிகள் பிரிக்கப்பட்டு வசதிகள்
செய்யப்பட்டுள்ளன என்றார். ஆயினும், இப்பெண்கள் கடற்கரையைச் சுற்றியுள்ள
பூங்காவிற்கு வரும்போது அந்நாட்டு கலாசாரப்படியே உடையணிந்து வரவேண்டும்
என்பதனையும் அஹமத் கூறினார்.
thamilan. thanks
No comments:
Post a Comment