நெல்லை மாவட்டத்தைச்
சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் விசாரணைக்காக கிராமத்திற்கு சென்றபோது தெரியாமல் ஒரு
பாம்பை மிதித்துவிட்டார். அதுவும் அவரது காலைக் கவ்வியது. விடவேயில்லை. ஆனால் அதன்
தலையை தைரியமாகப் பிடித்து இழுத்து சாக்குப்பையில் அதனை அடைத்தார். பின்புதான் தெரிந்தது அது ஒரு மலைப்பாம்பு
என்று!
நெல்லை மாவட்டத்தின் இந்த படு தைரிய இன்ஸ்பெக்டர் பெயர் சாம்சன். இரவு 7 மணிவாக்கில் அவர் ரோஸ்மியாபுரம் கிராமத்திற்கு அருகில் ஒரு தோட்டத்திற்குச் சென்றார்.
இருட்டில் கிடந்த பாம்பை மிதித்துவிட்டார். சிறிது நேரம் கழித்துதான் மிதித்தது மலைப்பாம்பு என்று தெரியன்வதது. அதிர்ச்சியடைந்த அவர் சமயோசிதமாக காலைக்கவ்வி கடித்த மலைப்பாம்பின் தலையை பிடித்து இழுத்து சாக்குப்பையில் போட்டுக் கட்டினார்.
ஆளை விட அதிக உயரமும் எடை அதிகமாகவும் அந்தப் பாம்பு இருந்தாம். 9 அடி நீளம் இருந்ததாம் அந்த மலைப்பாம்பு.
பாம்பு கடித்த காலில் பாம்பின் 5 பற்களின் தடம் பதிந்திருந்தது. மலைப்பாம்பு விஷமில்லாததால் பயமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பிறகு வனத்துறையினர் மலைப்பாம்பை கொண்டு சென்று அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர்.
மலைப்பாம்பை கண்டு அஞ்சாமல் அதன் தலையைப் பிடித்து இழுத்து சாக்குப்பையில் அடைத்த இன்ஸ்பெக்டர் சாம்சனின் தைரியத்தை அனைவரும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

tamil.webdunia thanks
No comments:
Post a Comment