லிஸ்பன், மே 4-
பொருளாதார சிக்கன நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, போர்த்துகீசிய அரசு 30 ஆயிரம் அரசுப்பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. அதுபோல், பணிஓய்வு பெறும் வயதை 65லிருந்து 66ஆக மாற்றி அமைக்கவும் தீர்மானித்துள்ளது. மேலும், வாரத்திற்கு 35 மணி நேரம் வேலை செய்வதை மாற்றி 40 மணி நேரமாக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டத்தின்மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்,அரசுக்கு 4.8பில்லியன் யூரோ செலவு குறையும் என்று போர்த்துகீசிய பிரதமர் பெட்ரோ பசொஸ் கேதோ தெரிவித்தார். மற்ற சிக்கன நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்பதோடு, பெரிய எதிர்ப்புகளையும் உருவாக்கின.
இந்தப் புதிய ஏற்பாடுகளைச் செய்வது, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு தமது பொறுப்பினை எடுத்துக்காட்டும் என்று பிரதமர் கேதோ, மக்களிடையே உரையாற்றியபோது தெரிவித்தார். இதில் காலதாமதம் செய்வது தம்மீதுள்ள நம்பிக்கையைக் குறைத்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2011ஆம் ஆண்டில்,ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதி மையம் ஆகிய மூன்றும் இணைந்து போர்த்துகீசிய நாட்டிற்கு 78 பில்லியன் யூரோ கடன் உதவி வழங்கியுள்ளன. வேலையில்லாத்திண்டாட்டம் 18 சதவிகிதத்தை எட்டியுள்ள தற்போதைய நிலைமையில், 2013 ஆம் ஆண்டிற்கான ,பொருளாதார கணக்கீடுகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இறங்குமுகத்திலேயே உள்ளன. அந் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான சோசியலிஸ்ட் கட்சி, பிரதமரின் செயல்பாடுகளையே குறை கூறி வருகிறது.

maalaimalar thanks
No comments:
Post a Comment