அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 14 May 2013

விருதுநகரில் தனியார் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு



பதிவு செய்த நாள் -
மே 14, 2013  at   12:07:39 PM
 
விருதுநகரில் தனியார் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 3-வது மாடி கட்டட பணிகள் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று கான்கிரீட்டுக்கு போடப்பட்ட கம்புகளை பிரித்து எடுக்கும் வேலை நடைபெற்ற போது, பாரம் தாங்காமல் கான்கிரீட் கட்டடம் முழுமையாக சாய்ந்தது. இதில் கீழே நின்று வேலைபார்த்துக்கொண்டிருந்த 7 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ளவர் விருதுநகர், குமாராபாளையத்தைச் சேர்ந்த மாணவன் மாரிச்செல்வம் ஆவார். இவர் விருதுநகரில் உள்ள மற்றொரு பள்ளியில் 10-ம் படித்து வருகிறார். இப்போது தேர்வுவிடுமுறையில், குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு வந்துள்ளார். அப்போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. மாணவனை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காயமடைந்தர்வகள் சிகிக்சைக்காக விருதுநகர் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேருக்கு லேசான காயேமே ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற 4 பேரும் பலத்த காயத்துடன் இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment