மும்பை, மே 22-
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பள்ளிவாசல் அருகே குண்டுவெடித்தது. பின்னர் சிறிது நேரத்தில் அருகில் உள்ள மார்க்கெட் பகுதியில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் 35 பேர் இறந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இது தொடர்பாக 9 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு கைது செய்தது.
பின்னர் விசாரணை நடைபெற்றபோது, இந்த குண்டுவெடிப்பில் வலதுசாரி தீவிரவாத குழுக்களுக்கு தொடர்பு உள்ளது என்று அசீமானந்தா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு மறு விசாரணை நடத்தி வலதுசாரி தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், லோகேஷ் சர்மா, தான் சிங், ராஜேந்திர சவுத்ரி மற்றும் மனோகர் நர்வாரியா ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளது

maalaimalar. thanks
No comments:
Post a Comment