By ராமநாதபுரம்
First Published : 22 May 2013 \
ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் தொடர்ந்து 20 வருடங்களாகக் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் முஸ்லிம் பெண்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
பெரியபட்டினம் நகர் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட துணைத் தலைவர் பைரோஸ்கான் ஆகியோர் தலைமையில் முஸ்லிம் பெண்கள் வருவாய் கோட்டாட்சியர் லாரன்சிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பெரியபட்டினம் பகுதியில் கோட்டைக்குளம், செட்டியார் குளம் ஆகிய இரு இடங்களுக்கும் மேற்புறத்தில் தொடர்ந்து 20 வருடங்களாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். குடியிருந்து வரும் இடம் அரசு புறம்போக்கு இடம். எனவே நாங்கள் வசித்து வரும் பகுதியில் உள்ளவர்களுக்குப் பட்டா வழங்க வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா இல்லாததால் வீட்டு வரி ரசீது போட முடியவில்லை.எனவே நாங்கள் வசிக்கு இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
dinamani thanks
No comments:
Post a Comment