அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 18 May 2013

அமெரிக்காவில் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து: 60 பேர் படுகாயம்

[ சனிக்கிழமை, 18 மே 2013,
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தண்டவாளத்தில் இருந்து விலகிச் சென்ற ரயில் மீது எதிரே வந்த ரயில் மோதியதில் 60 பேர் படுகாயமடைந்தனர்.
நியூயார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து நியூ ஹேவன் நோக்கி நேற்று மாலை அதிவேக மின்சார ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது.
இந்த ரயிலில் சுமார் 250 பயணிகள் இருந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கனெக்டிக்கட் அருகேயுள்ள பிரிட்ஜ்போர்ட் பகுதியில் ரயில் சென்ற போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தை விட்டு விலகி சாய்ந்தது.
அப்போது எதிர்திசையில் இருந்து வேகமாக வந்த மற்றொரு ரயில், சாய்ந்து நின்ற ரயிலின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் 60 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்தினால் நியூயார்க் - பொஸ்டன் நகருக்கிடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

newsonews thanks

No comments:

Post a Comment