- TUESDAY, 14 MAY 2013 08:06
பாகிஸ்தான் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நவாஸ் ஷெரீப்,
பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளிக்கையில், இந்தியா, அமெரிக்காவுடன் பாகிஸ்தான் எப்போதும் போல சுமுக உறவுடன் இருக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தானில் ஜனநாயக முறையில் நாடாளுமன்றதேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் முதலிடத்தை நவாஸ் ஷெரீப் கட்சியும், இரண்டாவது இடத்தை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சியும் பிடித்தன. இப்போது அதிபர் பதவி ஏற்கவுள்ள நவாஸ் ஷெரீப் பத்திரிகையாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது,
"நான் ஏற்கனவே பதவியில் இருந்த போது, பாகிஸ்தான், அமெரிக்கா இடையே நல்ல உறவு இருந்தது. அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்காவுக்கு எதிர்ப்பாளர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்துவதை அமேரிக்கா மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
காரணம் இது பாகிஸ்தான் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. விமானத் தாக்குதலை நிறுத்துவது குறித்து, அமெரிக்கத் தலைவர்களுடன் பேசுவேன். இந்த விஷயத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
இதே போன்று இந்தியாவுடன் சுமுக உறவு கொள்ளவும் ஆப்கானிஸ்தானுடன் சமாதானமாக செல்லவும் பாகிஸ்தான் விரும்புகிறது. இராணுவத்துடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை முஷாரப், தனது சொந்த பலத்தால் என்னை பதவியில் இருந்து நீக்கினார். அதற்கு ராணுவம் காரணம் என்று நான் கருதவில்லை." என்று கூறியுள்ளார்.
இதேவேளை பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க்கிடம் அழைப்பு விடுத்தார். அதை நிராகரித்த இந்திய பிரதமர் முக்கிய அலுவல்கள் இருப்பதால் பதவியேற்பு விழாவிற்கு செல்ல முடியாது என கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
4tamilmedia thanks
No comments:
Post a Comment