ON 24 MAY 2013.
மாலியின் எல்லைத் தேசமான நைஜரில்ல் நடந்த இந்தத் தாக்குதலில் 13 பேர் காயமடைந்ததாக பிரான்சின் அணுசக்திக் குழுவான அரேவா தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. Somaïr சுரங்கத்தில் யுரேனியம் எடுக்கும் அரேவாவின் தளம் நேற்று காலை நைஜர் நேரம் காலை 05h30 ற்குத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மீதான இத் தீவிரவாதத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ஊடக அறிக்கை கூறுகின்றது. இராணுவ உடை அணிந்தபடி ஒரு 4X4 வாகனத்தில் வாகனம் நிறைந்த வெடிகுண்டோடு வந்து தமது யுரேனியம் தளத்தின் மின்சார வழங்கல் மையத்தின் மீது மோதி வெடித்ததாக அரேவாவின் Somaïr சுரங்கத்தளத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
2013 ஜனவரி ஆரம்பித்திலிருந்து நைஜரில் பிரெஞ்சுத் தளம் மீதான முதற் தாக்குதல் இதுவேயாகும். இதற்கு முன்னர் கூட எப்பொழும் நைஜீரியாவில் பிரெஞ்சுத் தளங்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றிருக்கவில்லை. இந்த அரேவா நிறுவனம் நைஜரில் யுரேனியம் அகழ்ந்தெடுக்கும் முறை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் நாட்டின் வளத்தைக் கொள்ளை அடிப்பது என்றும் அங்கு சில அமைப்புக்களும் ஆயுதக் குழுக்களும் ஏற்கனவே எச்சரித்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
News :Source
eutamilar thanks
No comments:
Post a Comment