அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 14 June 2013

ஆசிரியர் வேலை: 2881 காலி இடங்களுக்கு 2 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பம்

ஆசிரியர் வேலை: 2881 காலி இடங்களுக்கு 2 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பம்
சென்னை, ஜூன். 14-

அரசு பணிகளில் ஆசிரியர் பணியே மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. கல்வியை போதிக்கும் குருவே (ஆசான்) எல்லோரையும் விட உயர்ந்தவர். ஆசிரியர் பணிக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. பணியில் இருந்தாலும் சரி, ஓய்வு பெற்று இருந்தாலும் சரி ஆசிரியர் பணி மட்டுமே போற்றுதலுக்குரிய பணியாக கருதப்படுகிறது.

ஒரு காலத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை வேறு. அரசின் மற்ற துறைகளை போலவே கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியம் அதிகம் பெறுகிறார்கள். தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்தது மாத சம்பளம் ரூ.16 ஆயிரத்து 500. உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் ரூ.25 ஆயிரம். மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு குறைந்த மாத சம்பளம் ரூ.30 ஆயிரம்.

பணி அனுபவம் அதிகரித்து செல்லச் செல்ல இவர்களது ஊதியமும் படிப்படியாக உயர்ந்து செல்லும். இவை எல்லாவற்றையும் விட ஆசிரியர்களின் வேலை நாட்கள் மற்ற துறைகளை விட மிகவும் குறைவாகும். மாணவர்களை போல கோடை விடுமுறையும் ஆசிரியர்களுக்கு கிடைக்கிறது. அரசின் பொதுவான விடுமுறைகள் தவிர மழை, புயல், வெயில் என இயற்கை சீற்றங்களாலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் ஆசிரியர்களின் வேலை நாட்கள் குறைகின்றன.

இவை எல்லாவற்றையும்விட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி மன நிறைவை கொடுப்பதாலும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை) பள்ளி செயல்படும் நேரமாக இருப்பதால் ஆசிரியர் பணியை பெரிதும் விரும்புகிறார்கள். மாலை 5 அல்லது 6 மணிக்குள் வீட்டிற்கு சென்று விட வாய்ப்பு உள்ளதால் ஆண்களை விட பெண்கள் ஆசிரியர் பணியை அதிகம் விரும்பி ஏற்கிறார்கள்.

என்ஜினீயரிங் பாலிடெக்னிக் போன்ற தொழில் படிப்புகளில் அதிக கட்டணம் செலுத்தி படிப்பதை விட குறைந்த செலவில் ஒரு பட்டப்படிப்பும் அதனுடன் பி.எட் பயிற்சியும் அல்லது ஒரு முதுகலை படிப்பும், பி.எட் பயிற்சியும் படித்து முடித்தால் ஆசிரியர் பணிக்கான தகுதியை எட்டிவிட முடியும். ஏதாவது ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு குறைந்த செலவே ஆகும். போட்டித் தேர்வோ அல்லது தகுதித்தேர்விலோ வெற்றி பெற்று விட்டால் எளிதாக ஆசிரியர் பணி கிடைத்து விடும்.

இடைநிலை ஆசிரியர் தகுதிக்கு பிளஸ்-2 முடித்து 2 ஆண்டுகள் பட்டயப் பயிற்சி பெற வேண்டும். இந்த பயற்சியை முடித்து ஆசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற்றால் எந்த செலவும் இல்லாமல் ஆசிரியர் வேலைக்கு சென்று விடலாம். தகுதி மற்றும் போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களே ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும் என்ற நிலை கடந்த ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான முழு முயற்சிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

2881 காலி இடங்கள் தற்போது 2881 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்த உள்ளது. இதற்கு 2 1/2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்ததில் 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகி உள்ளது. விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் எழுத உள்ளனர். கடைசி நாள் என்பதால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க ஆர்வத்துடன் பல ஆசிரியர்கள் வந்தனர்.

சென்னையில் நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பம் பெறப்பட்டது. இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் 10-க்கும் மேற்பட்ட மையங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் மேற்பார்வையில் 30 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். மற்ற மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரிகள் அலுவலங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி நடைபெறுகிறது.


.maalaimalar thanks

No comments:

Post a Comment