June 23, 2013 04:01 pm
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தலிபான்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்
.
அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தும் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியும் தலிபான்கள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். இந்த வன்முறை தாக்குதல் சம்பவங்களில் பல கோடி மதிப்பிலான சொத்துகளும் விலை மதிப்பில்லாத மனித உயிர்களும் சேதமடைந்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுருந்த நேட்டோ படையிலிருந்த அமெரிக்க வீரர்கள் இந்த வாரம் நாடு திரும்பினர். இதனால், தலிபான்களின் அட்டூழியம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் 38 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நன்கர்ஹார், பர்வான், கந்தகார்,சாபூல், உருஸ்கன், வர்டாக்,லோகர், கஸ்னி, ஹெல்மண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு நடந்த தேடுதல் வேட்டையில் 38 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கான் தேசிய இராணுவம் நேட்டோ படைகளுடன் இணைந்து நடத்திய வான்வழி தேடுதல் நடவடிக்கையில் சரணடைந்த 6 பேர், படுகாயமடைந்த 4 பேர் என 10 தலிபான் தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர் என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment