SUNDAY, 23 JUNE 2013 15:14

ரேஷன் கடைகளில் தினை அரிசி, தினை மாவு விற்கவேண்டும் என்று தமிழக் அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு, இவைகளை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிய வருகிறது.
ரேசன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதத்துக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதைத் தவிர மானிய விலையில் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. மேலும் மலிவு விலை அரிசிகடைகளை முதல்வர் திறந்துவைத்து, அதன் மூலம் ரூபாய் 20க்கு அரிசி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். அங்கங்கு மலிவு விலை காய்கறி கடைகளையும் அவ்வபோது திறந்து வைத்து வருகிறார். இதை அடுத்து, தற்போது ரேஷன் கடைகளில் தினை அரிசி, தினை மாவு இவைகளையும் விற்க சொல்லி கட்டளையிட்டுள்ளார் தமிழக முதல்வர்.
தமிழகத்துக்குத் தேவையான தினை அரிசியை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தினை அரிசி, தினை மாவு உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய பழமை வாய்ந்த தானியம் ஆகும். இதை சாப்பிடுவதன் மூலம் மக்கள் ஆரோக்கியம் பேணப்படும். என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த சத்தான தானியமனான தினை குறித்து, இப்போதுள்ள இளம் சந்ததியினரும் தெரிந்து கொள்வார்கள் என்று, தமிழக அரசு கருதுவதாகவும் தெரிகிறது. கோதுமையை தென்மாநில மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் ரேஷன் கடைகளின் மூலம் அவைகளை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதே போன்று தினை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டு பயன்படுத்தி பயனடைய, அவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமே தினை அரிசியை அறிமுகம் செய்து விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தினை அரிசி உடலுக்கு மிகுந்த சத்து மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும். கபநோய், வாயு கோளாறு, வீக்கம், வாதம் நீங்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினை அரிசி சாதம் சாப்பிடலாம். அந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு தேனும், தினை மாவும் சேர்த்து சாப்பிட்டதாக சரித்திரம் கூறுகிறது. மில்லட், இட்டாலியன் மில்லட் என்று ஆங்கிலத்தில் இதை அழைப்பார்கள்.

news 4tamilmedia thanks
No comments:
Post a Comment